மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்த அனுமதியளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஒரு வாரத்துக்கும் மேல் நீடித்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தமிழக அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இரவு நேரங்களில் மெரினாவில் போலீஸ் பாதுகாப்பையும் அதிகபடுத்தியுள்ளது.
இதையடுத்து மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என்று கூறி, வழக்கு தொடுக்கப்பட்டது. அதில், ‘மெரினாவில் போராட்டம் நடத்தலாம்’ என்று கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ‘சட்ட ஒழங்கை நிலைநாட்ட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரியானதே. ஆகவே, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது’ என்று உத்தரவிட்டுள்ளது.