Read in English
This Article is From Aug 19, 2018

மருத்துவ படிப்பு மாணவியின் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவையில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில், உண்ணாமலை என்ற மாணவி சேர்ந்துள்ளார்

Advertisement
Education
Chennai:

சென்னை: கடந்த 2017 ஆம் ஆண்டு, கோவையில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில், உண்ணாமலை என்ற மாணவி சேர்ந்துள்ளார். பல் மருத்துவ படிப்பிற்கான பதிவு செய்யப்படாத மேனேஜ்மெண்ட் ஒதுக்கீடு மூலம் அவர் சேர்ந்துள்ளார். மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் மூலம் சேருவதற்கு தேவையான 131 மதிப்பெண்களையும் அவர் எடுக்காததால், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக விதிமுறையின்படி, மாணவியின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல் மருத்துவ படிப்பில் சேர்ந்து ஒரு ஆண்டு நிறைவடைய உள்ளதால், கல்லூரிப் படிப்பை தொடர அனுமதி அளிக்குமாறு சென்னை உயர் நிதிமன்றத்தில் உண்ணாமலை மனு அளித்துள்ளார். கல்லூரி படிப்பை மாணவி தொடங்கியதால், இந்த முறை அவருக்கு விலக்கு அளிக்குமாறு கல்லூரி சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மருத்துவ படிப்பிற்கு தேவையான மதிப்பெண்கள் எடுக்காத நிலையில், காலி இடங்களின் எண்ணிகையை அடிப்படையாக கொண்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிக்கு இடம் அளித்துள்ளது. இது மருத்துவ படிப்பு சேர்க்கை விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். இதனால், மாணவி உண்ணாமலையின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், பல் மருத்துவ படிப்பில் சேர, சுயநிதி கல்லூரிகள் ஒதுக்கும் மேனேஜ்மெண்ட் இடங்களுக்கும், தகுதி மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளையே சேர்த்து கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், தகுதி மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு இடம் அளிப்பது விதிமுறைக்கு எதிரானது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement