This Article is From Oct 04, 2018

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு பின்னடைவு!

அதை நிராகரித்த நீதிபதி சந்திரா, வரும் புதன் கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டார்.

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு பின்னடைவு!

வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மாறன் சகோதரர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்

Chennai:

சட்டவிரோத தொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கில், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சென்னை, போட் கிளப்பில் இருக்கும் தனது வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.

இப்படி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்ததால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் கடந்த மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம், மாறன் சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

ஆனால், இதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி ஏ.ஜி.சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ராஜகோபாலன், அரசு சார்பில் வாதாடியபோது, ‘மாறன் சகோதரர்கள், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஏற்கெனவே மனு செய்து, அது நிராகரிக்கப்பட்டது. மேலும் வழக்கு தொடர்பான விசாரணையை 12 மாதத்துக்குள் முடிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ-க்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது போதிய ஆதாரம் இருக்கிறது. எனவே, இந்த வழக்கை தொடர்ந்து நடத்திட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, அனைத்து நடவடிக்கைகளும் முறைப்படி செய்யப்பட்டுள்ளது. எனவே, சிபிஐ-யின் விசாரணைக்கு முடக்குப் போடக் கூடாது’ என்று தெரிவித்தார்.

மாறன் சகோதரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அளித்துள்ள விளக்கத்துக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும். அதுவரை இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட வேண்டும்’ என்று வாதாடினார்.

அதை நிராகரித்த நீதிபதி சந்திரா, வரும் புதன் கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டார்.

.