This Article is From May 08, 2020

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் ஆன்லைன் விற்பனை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பெண்களும், சமூக ஆர்வலர்கள் உயர் நீதிமன்ற உத்தரவை வரவேற்றுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்
  • ஆன்லைனில் மது விற்பனைக்கு தடையில்லை என நீதிமன்றம் விளக்கம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. இது மதுப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பெண்களும், சமூக ஆர்வலர்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர்.

தமிழகத்தில் மதுக்கடைகள் மே 7 முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டன.

மதுப்பிரியர்களும் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இந்த நிகழ்வின்போது சமூக விலகல் ஏதும் கடைபிடிக்கப்படவில்லை என்பதை சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் காட்டியது.

மக்களின் அத்தியாவசிய தேவைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அத்தனையையும் தகர்த்து ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம்தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் ஆன்லைன் விற்பனை எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. இதற்கிடையே உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

.