This Article is From Jan 29, 2019

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நாளை மூட நீதிமன்றம் உத்தரவு!

காந்தி நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

காந்தி நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்திற்காக போராடிய அகிம்சைவாதியான மகாத்மா காந்தியின் 72 ஆவது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை மூட மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படும் நிலையில், காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டும் நாளை ஒரு நாள் டாஸ்மாக் கடைகளை மூட உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுக்கடையை மூட வேண்டும் என்பது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த மதுரைக் கிளை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது, அக்டோபர் 2ம் தேதி அன்று மதுக்கடைகளை விடுமுறை விடப்படும். அப்படியிருக்கும் போது நாளை காந்தியின் நினைவு தினமும் டாஸ்மாக் மூடப்படுமா என்ற மனுதாரர் கேள்வி எழுப்பினார்.

Advertisement

இதைத்தொடர்ந்த, நாளை காந்தி நினைவு நாள் என்பதால் நாளை ஒரு நாள் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement