This Article is From Mar 21, 2019

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம், மாறன் சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

Chennai:

சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். இப்படி மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தை நாடுவது மூன்றாவது முறையாகும். இந்நிலையில் நீதிமன்றம், மாறன் சகோதரர்களுக்கு எதிராக மீண்டும் தீர்ப்பளித்துள்ளது. 

தயாநிதி மாறன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது, கடந்த 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை சென்னை, போட் கிளப்பில் இருக்கும் தனது வீட்டில் சட்டத்துக்குப் புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.

இப்படி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வைத்ததால், அரசுக்கு 1.78 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், இந்த டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம், மாறன் சகோதரர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

ஆனால், இதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இப்படிப்பட்ட சூழலில்தான், தங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த வழக்கில் அனைத்து வித நடைமுறைகளையும் பின்பற்றிய பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதைத் திரும்பப் பெற முடியாது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ நீதிமன்றம் நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும். மனுதாரர்கள், வழக்கு விசாரணையை குலைக்க நினைத்தால், அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்தவும் சிபிஐ நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கலாம்' என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

.