பாஜக-வின் தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர் நீதிமன்றம் குறித்து அவமதிப்பாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும், அவரை 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இருக்கும் கோயிலில் விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடத்தில் கலந்து கொள்ள எச்.ராஜா சென்றிருந்தார். அப்போது அவர் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் தரக்குறைவாக பேசினார். அவர் பேசியது வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி பரவியது.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், தானாக முன் வந்து எச்.ராஜா மீது வழக்கு தொடர்ந்தது. அவரை 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகும் படியும் உத்தரவிட்டுள்ளது.