தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.
Chennai: சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை பராமரிக்க கோரி சமூக ஆர்வலர் ஜவஹர்லால் சண்முகம் உள்ளிட்டோர் மனு கொடுத்திருந்தார்.
இந்த மனுவின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி நீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக பொதுப்பணித்துறைக்கு ரூ. 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமர்வு நீதிபதி ஆர். சுப்பையா மற்றும் சி. சரவணன் ஆகியோர் என்ஜிடி சட்டபிரிவுன் 22ந் கீழ் எந்தவொரு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டினை உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே செய்ய முடியும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.