Read in English
This Article is From Sep 13, 2019

இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? -அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

இந்த நாட்டில் மக்கள் உயிருக்கு மரியாதை இல்லை. அதிகாரத்துவத்தின் பொறுப்பற்ற தன்மையால் ஒருவரின் வாழ்க்கையே பறிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்துவத்தின் அக்கறையின்மையை மன்னிக்க மாட்டோம். நாங்கள் அரசாங்கத்தின் மீதான் நம்பிக்கையை இழந்து விட்டோம் - உயர்நீதி மன்றம்

Advertisement
தமிழ்நாடு Edited by

நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது

Chennai:

சென்னையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் சரிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் இன்ஜினியர் மீது விழுந்துள்ளது. இதில் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். இதனால் அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்துது. நீதிபதிகள் “ இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை ? " என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியது மேலும் “அரசு மீது நம்பிக்கை இல்லை “என்றும் தெரிவித்தனர்.

அப்போது “சட்ட விரோதமாக பேனர்களைத் தடுக்க உயர்நீதி மன்றம் கடுமையாக உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.” என்று தமிழக அரசினை கடுமையாக  சாடினார்கள். “இந்த நாட்டில் மக்கள் உயிருக்கு மரியாதை இல்லை. அதிகாரத்துவத்தின் பொறுப்பற்ற தன்மையால் ஒருவரின் வாழ்க்கையே பறிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்துவத்தின் அக்கறையின்மையை மன்னிக்க மாட்டோம். நாங்கள் அரசாங்கத்தின் மீதான் நம்பிக்கையை இழந்து விட்டோம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. சட்டவிரோதமான ஃப்ளெக்ஸ் போர்ட்டுகளுக்கு எதிராக பல உத்தரவுகளை பிறப்பித்து சோர்ந்து விட்டோம் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

Advertisement

பொது இடங்களில் வாழும் நபர்களின் புகைப்படங்கள் மற்றும் உருவப்படங்களை ஃப்ளெக்ஸ் போர்டாக வைப்பது 2017-இல் தடை செய்யப்பட்டது. 

அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது மகன் திருமணத்திற்காக மீடியனில் வைக்கப்பட்டிருந்த அந்த பேனரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் படங்கள் இடம்பெற்றிருந்தது. இந்த திருமண விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.  

Advertisement

சுபஶ்ரீயின் இறப்புக்குப் பிறகு அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சி தலைமையிடமும் அனுமதியின்றி ஃப்ளெக்ஸ் போர்டு வைக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Advertisement