This Article is From Jul 01, 2020

சாத்தான்குளம் சம்பவம்! நாளை ஆஜராக 3 போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன்

டி.எஸ்.பி. பிரதாபன், கூடுதல் டி.எஸ்.பி. டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 

சாத்தான்குளம் சம்பவம்! நாளை ஆஜராக 3 போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் சம்மன்

3 போலீசாரும் காலை 10.30க்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Chennai:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு போலீசார் சரிவர  ஒத்துழைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 3 போலீசார் நாளை காலை 10.30க்கு ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டி.எஸ்.பி. பிரதாபன், கூடுதல் டி.எஸ்.பி. டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் ஆகியோருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. 

.