This Article is From Aug 18, 2020

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Sterlite case: இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Sterlite Copper case: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Chennai:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, மே.22ம் தேதியான அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். 

அப்போது, அந்த பேரணி பெரும் வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

பல மாதங்கள் இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காலை 10.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிறப்பிக்க உள்ளனர். 

.