விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் பேனரை கழற்றிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன
ஹைலைட்ஸ்
- மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
- ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், பேனரை தாங்கள் வைக்கவில்லை என்று அறிக்கை
- விமான நிலைய அதிகாரிகளின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது
Chennai: மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோவின் பேக்கேஜ் ஸ்கிரினிங் பகுதியில் வைக்கப்பட்ட பேனர்கள் சமூக ஊடகங்களில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றன.
பேனர்களில் தீபாவளி நாளில் மாசுபடுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பேக்கேஜ் ஸ்கிரினிங்க் பகுதியில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
ஸ்பைஸ்ஜெட்டின் பிராண்ட் லோகோவும் ஒரு மண் விளக்கும் அருகருகே காட்டப்பட்டிருந்தது. “மாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்”என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
மதுரை விமான நிலையத்திலிருந்து 70கி.மீ தொலைவில் சிவகாசி உள்ளது. அங்கு பட்டாசு தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. சிவகாசியை தளமாகக்கொண்ட பிராண்டுகளுக்கு தீபாவளி முக்கியமான வணிக நாளாகும். பல பட்டாசு நிறுவனங்கள் ஸ்பெஸ் ஜெட் விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளனர். பட்டாசுகளில் முற்றிலும் மாசு இல்லாதவையும் உள்ளதாக தெரிவிக்கின்றன.
ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையில், பேனர் விமான நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் போடப்பட்டது.இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் பேனரை கழற்றிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“இது விமான நிலையத்தின் அனுமதியைப் பெறாமல் விமான நிலைய ஆபரேட்டரால் மட்டுமே மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும். இந்த பதாகைகளுடன் ஸ்பைஸ்ஜெட்டை இணைப்பது பிராண்டை மோசமான முறையில் வேண்டுமென்றே சித்தரிக்க முயற்சிப்பது” என்று ஸ்பைஸ்ஜெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிவகாசியை தளமாகக் கொண்ட பட்டாசு தயாரிப்பாளர் காக் பிராண்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்பைஸ்ஜெட்டை விமர்சித்தார். “உங்களிடம் மாசு இல்லாத விமானங்கள் இருக்கிறதா… எங்கள் பட்டாசுத் தொழிலைப் பற்றி பேச எவ்வளவு தைரியம்? நீங்கள் ஏன் உங்கள் தொழிலை நிறுத்தக்கூடாது. விமானங்களை குப்பையாக எண்ணி அப்புறப்படுத்தி விட்டு பின் மக்களுக்கு அறிவுரை கூற வாருங்கள்” ஶ்ரீகாளிஸ்வரி பட்டாசு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பான காக் பிராண்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
பட்டாசு உற்பத்தியாளர்களின் சங்கத்தின் பொது செயலாளர் மாரியப்பன் ரூ. 3,000 கோடி தொழில், “நாங்கள் இங்கே எங்கள் எம்.பிக்கு தகவல் கொடுத்தோம் பேனர் அகற்றப்பட்டதை உறுதி செய்தார்”
பல்வேறு துறைகளைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கிடையேயான வார்த்தை போரும் சமூக ஊடகங்களில் எதிர்வினைகளும் வெளிவந்தன. குறிப்பாக தீபாவளி பருவத்தில் காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகள் குறித்து அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.