This Article is From Dec 14, 2019

“தமிழ் vs சமஸ்கிருதம்”- ஆதாரங்களுடன் மத்திய அரசுக்கு சாட்டையடி கொடுத்த மதுரை MP!

Tamil vs Sanskrit Debate - "சமஸ்கிருதமே இந்திய அடையாளத்தின் கலாசாரத்தின் அடையாளம் என்று நீங்கள் சொன்னால், அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாகவே இருக்கும்"

“தமிழ் vs சமஸ்கிருதம்”- ஆதாரங்களுடன் மத்திய அரசுக்கு சாட்டையடி கொடுத்த மதுரை MP!

Tamil vs Sanskrit Debate -

Tamil vs Sanskrit Debate - இந்திய அளவில் இயங்கும் 3 சமஸ்கிருத தனியார் பல்கலைக்கழகங்களை, மத்திய அரசின் பல்கலைக்கழகங்களாக மாற்ற மசோதா கொண்டு வந்துள்ளது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இந்த மசோதா குறித்தான விவாதத்தின் போது பல தரவுகளை முன்வைத்துப் பேசினார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். 

“இந்த மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசும்போது மத்திய அமைச்சர் சொல்கிறார், ‘இதை சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இடையிலான போட்டியாக மாற்றிவிட வேண்டாம்' என்கிறார். கண்டிப்பாக நாங்கள் சமஸ்கிருதத்தையும் தமிழையும் போட்டியாக நினைக்கவில்லை. காரணம், தமிழ், சமஸ்கிருதத்துக்கு 700 ஆண்டுகள் முந்தையது. அப்படிப் பார்த்தால், இளைய மொழியான சமஸ்கிருதத்தோடு ஏன் அதைப் போட்டியாகக் கருதப் போகிறோம்.

சமஸ்கிருதம் தேவ பாஷை என்கிறார் மத்திய அமைச்சர். அறிவியல் பூர்வமாக சில தரவுகளை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சமஸ்கிருதம் தொடர்பாக கிடைத்துள்ள கல்வெட்டுகள், அதன் காலம் கி.பி 1 ஆம் நூற்றாண்டு என்கிறது. ஆனால் தமிழ் தொடர்பாக கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் கி.மு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதை வைத்துத்தான் நாங்கள் சொல்கிறோம், சமஸ்கிருதம் தமிழைவிட 700 ஆண்டுகள் இளைய மொழி என்று. நீங்கள் சமஸ்கிருதத்தைத் தேவ பாஷை என்று சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், தமிழ், மக்களின் மொழி. 3000 ஆண்டுகளாக மக்களின் மொழியாகவே தமிழ் தொடர்ந்து வருகிறது. 

சமஸ்கிருதமே இந்திய அடையாளத்தின் கலாசாரத்தின் அடையாளம் என்று நீங்கள் சொன்னால், அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாகவே இருக்கும். ஒரு அரசு, இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழிகளையும் அதன் கலாசாரத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும். அதைவிடுத்து, ஒரு மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து, அது மனிதர்களுக்கு அப்பாற்பட்ட தேவ பாஷை என்று அடையாளப்படுத்துவது மதச்சார்பற்ற தேசத்துக்கு அழகல்ல,” என்று முழு மூச்சுடன் பேசி முடித்தார் எம்பி சு.வெங்கடேசன். 

அவரின் பேச்சுக்கு தமிழக எம்பிக்கள் தொடர்ந்து மேசையைத் தட்டி தங்களது ஆதரவைத் தந்த வண்ணம் இருந்தனர். 


 

.