மதுரை விழாவில் எந்த நேரத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைலைட்ஸ்
- மதுரையில் அரசு சார்பில் நேற்று விழா நடத்தப்பட்டது
- அரசு விழாக்களில் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பது மரபு
- நேற்றைய விழாவில் தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை
மதுரையில் வரவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பங்கெடுத்தார். இருவரும் கலந்துகொண்ட இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை. அதைப்போலவே தேசிய கீதமும் இசைக்கப்படவில்லை. இது குறித்து செய்தியாளர்கள், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
அதற்கு பொன்னார், ‘ஒரு நிகழ்ச்சி தொடர் விழாவாக நடக்கும்போது, ஒவ்வொரு இடைவேளையின் போதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதல் முறை அதைச் செய்திருப்பார்கள். ஆகவே, தமிழ்த்தாயையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாஜக-விற்கோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு துளியும் கிடையாது' என்று மழுப்பல் பதில் அளித்துள்ளார்.
மதுரை விழாவில் எந்த நேரத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை, தோப்பூரில் 1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதற்குத்தான் பிரதமர் மோடி, நேற்று அடிக்கல் நாட்டினார்.