This Article is From Jan 08, 2019

பெண்கள் பற்றி தரவரிசைக்கு மன்னிப்பு கோரிய பத்திரிக்கை

"பெண்களுக்கு பாலியல் உறவுகள் மற்றும் குடிபோதை பொருட்கள் எளிமையாக கிடைக்கும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை" என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

பெண்கள் பற்றி தரவரிசைக்கு மன்னிப்பு கோரிய பத்திரிக்கை

இந்தக் கட்டுரையில் "ஆண்களுடன் பெண்கள் உறவு கொள்ள ஆப்கள் மூலம் தேடுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

Tokyo:

ஜப்பானை சேர்ந்த பத்திரிக்கை ஒன்றில், "பெண்களுக்கு பாலியல் உறவுகள் மற்றும் குடிபோதை பொருட்கள் எளிமையாக கிடைக்கும் பல்கலைக்கழகங்களின் தரவரிசை" என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்காக அந்தப் பத்திரிக்கை தற்போது மன்னிப்பு கோரியுள்ளது.

டிசம்பர் 25ம் தேதி வெளியான பத்திரிக்கையில் பெண்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக கூறப்பட்டதையடுத்து,  மன்னிப்பு கேட்டு அந்த பிரதியின் விற்பனையையும் நிறுத்தி உள்ளது.

ஒரு பெண் இந்தப் புகாரை கொடுத்துள்ளார். அவர் "change.org மூலம் பெண்களை காட்சிப்பொருளாக பார்த்தல் மற்றும் மரியாதை குறைவாக நடத்தல்" என்று புகார் அளித்து, 28,000 பேரிடம் இது குறித்து புகாரை பெற்றுள்ளார்.

"வாசகர்களை பாதிக்கும் என்ற நோக்கத்திலும், பல்கலைக்கழகங்களின் உண்மையான பெயரை வெளியிட்டுள்ளதால் பெயர் பாதிக்கப்படும் என்பதாலும் மன்னிப்பு கேட்கிறோம்" என்று கூறியுள்ளது. 

இந்தக் கட்டுரையில் "ஆண்களுடன் பெண்கள் உறவு கொள்ள ஆப்கள் மூலம் தேடுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆப்ஸை வடிவமைத்தவரின் பேட்டியோடு இந்தக் கட்டுரை வந்துள்ளது. ஏற்கெனவே ஜப்பானில் மீ டு பிரச்னைகளும் வலுத்து வரும் நிலையில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

.