ஈரோட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தனக்கு சத்திய மங்கலம் நீதிபதி ஆர். ராஜவேலு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி என். உமா மகேஸ்வரி விசாரணை நடத்தினார். நீதிபதி ராஜவேலு தனக்கு பலமுறை பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ள வழக்கறிஞர் இது சம்பந்தமாக ஆடியோ ஒன்றை மாவட்ட முதன்மை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட நீதிபதி ஆர். ராஜவேலுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி உமா மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார்.