நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டது.
Kathmandu: இன்று காலை சுமார் 5.06 மணிக்கு, நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் 4.7 புள்ளி ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
காத்மாண்டுவில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள சிந்துபால்சவூக் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக ஏற்பட்டதாக நேபாளத்தின் நிலஅதிர்வை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நில அதிர்வுகள் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவிலும் உணரப்பட்டது.
இதுவரை சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் அறியப்படவில்லை.