This Article is From Feb 22, 2019

மஹா சங்கடஹர சதுர்த்தி நாளின் விரதமும் கிடைக்கும் பலன்களும்

திருமணமான பெண்கள் இன்றைய நாள் விரதமிருந்து மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்வார்கள். இதனால், கணவரின் ஆயுட்காலம் அதிகரித்து நித்திய சுமங்கலி வரம் கிடைக்கும் என மக்கள் வேண்டி வருகின்றனர். 

Advertisement
இந்தியா Written by

இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லை, கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ‘ஹர' என்றால் நீக்குவது என்று பொருள். வாழ்வில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் யாவற்றையும் நீங்கி வாழ மக்கள் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்கின்றனர். 

ஒவ்வொரு பவுர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய நான்காவது நாளை சங்கடஹர சதுர்த்தியாகும். இன்றைய நாளில் விநாயகருக்காக முழுநாள் விரதமிருந்து மாலை கோயிலுக்குச் சென்று வணங்கிய பின் விரதத்தை முடித்துக் கொள்வார்கள். 

இந்த நாளில் வைக்கும் வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் நிறைவேறும் என நம்பப்படுகிறது.  இன்றைய நாளில் விநாயகருக்கு கொழுக்கட்டை பிரசாதமாக படைப்பது வழக்கம். திருமணமான பெண்கள் இன்றைய நாள் விரதமிருந்து மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்வார்கள். இதனால், கணவரின் ஆயுட்காலம் அதிகரித்து நித்திய சுமங்கலி வரம் கிடைக்கும் என மக்கள் வேண்டி வருகின்றனர். 

Advertisement
Advertisement