Read in English
This Article is From Oct 11, 2019

18 வகையான ஆர்கானிங் பழங்கள் காய்கறிகளால் அமைக்கப்பட்ட நுழைவாயில்…! சுவாரஸ்ய தகவல்கள்

தோட்டக்கலைத் துறையின் சுமார் 200 ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த அலங்கார வளவை உருவாக்கியுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

அலங்கரிக்க கிட்டத்தட்ட 10 மணி நேரம் செலவிட்டனர்

Chennai/ New Delhi:

பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறைசாரா சந்திப்பு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

இரண்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 18 வகையான காய்கறிகளையும் பழங்களையும் பயன்படுத்தி  ஐந்துரத நினைவுச் சின்னத்தின் அருகே ஒரு வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

தோட்டக்கலைத் துறையின் சுமார் 200 ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த அலங்கார வளவை உருவாக்கியுள்ளனர். நுழைவாயிலை அலங்கரிக்க கிட்டத்தட்ட 10 மணி நேரம் செலவிட்டனர். அனைத்து காய்கறிகளும் ஆர்கானிக் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் உள்ள பண்ணைகளிலிருந்து  நேரடியாக கொண்டு வரப்பட்டுள்ளன என்று தோட்டக்கலை துறையின் கூடுதல் இயக்குநர் தமிழ்வேந்தன் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்தார். 

Advertisement

இன்று மாலை சந்தித்து பல பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.

மாமல்லபுரத்தின் சிற்பங்களை பார்வையிடவுள்ளனர். அதற்காக கடற்கரை கோயில், அர்ஜுனன் தவம், கிருஷ்ணரின் பந்து மற்றும் ஐந்து ரத சிற்பங்களை சிறப்பாக அலங்கரித்துள்ளனர். கடற்கரை கோவிலில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சியிலும் அவர்கள் கலந்து கொள்வார்கள். பிரதமர் மோடி பின்னர் சீன ஜனாதிபதிக்கு இரவு விருந்தளிப்பார். பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி ஷிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சனிக்கிழமை காலை நடைபெறும். உச்சிமாநாட்டிற்கு எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எல்லை பிரச்சினைகள். இந்தியா-சீனா எல்லைக்கான நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் கவனித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement