This Article is From Jul 07, 2020

கொரோனாவுக்கு எதிரான போர் 100 நாட்களை கடந்து செல்கிறது.. மோடியை சாடும் சிவசேனா!

மேலும், உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தை எட்டியதற்கு அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போர் 100 நாட்களை கடந்து செல்கிறது.. மோடியை சாடும் சிவசேனா!

கொரோனாவுக்கு எதிரான போர் 100 நாட்களை கடந்து செல்கிறது.. மோடியை சாடும் சிவசேனா!

ஹைலைட்ஸ்

  • கொரோனாவுக்கு எதிரான போர் 100 நாட்களை கடந்து செல்கிறது
  • கொரோனாவுக்கு எதிரான போர் மகாபாரதத்தை விட மிகவும் கடினமானது.
  • சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் விமர்சனம்
Mumbai:

கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்களில் முடிவு பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்த நிலையில், 100 நாட்களை தாண்டி நெருக்கடி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. 

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியதாவது, கொரோனாவுக்கு எதிரான போர் மகாபாரதத்தை விட மிகவும் கடினமானது. இந்த தொற்றுநோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாததால், 2021 வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தை எட்டியதற்கு அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார வல்லரசாக மாற வேண்டும் என்று கனவில் இருக்கும் நாட்டில், 24 மணி நேரத்தில் 25,000 கொரோனா பாதிப்பு பதிவாவது என்பது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளது. 

பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது ரஷ்யாவை விட முன்னேறியுள்ளோம். தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தால், நாம் முதலிடத்தை பெறுவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாபாரதப் போர் 18 நாட்கள் நீடித்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளிப்படுத்தினார். ஆனால், 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது. கொரோனாவுக்கு எதிரா போர் இன்னும் தொடர்கிறது. அதனை எதிர்த்துப் போராடுபவர்கள் சோர்வடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் நோயாளிகள் பெரிய அளவில் குணமடைந்து வருகின்றனர். எனினும், மாநிலத்தின் சில பகுதிகளில் நிலைமை அமைதியற்றதாக மாறும் என்று கொரோனா ஹாட்ஸ்பாட்டாக விளங்கும் தானே மாவட்டத்தை உதாரணமாக மேற்கோளிட்டுள்ளது.

பல அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினர், சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற நிர்வாகிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது நாட்டிற்கும் மாநிலங்களுக்கும் பொருந்தாது என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.

"கொரோனா வைரஸ் இங்கு தான் இருக்கும், நாம் அதனுடன் வாழ வேண்டும்... கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி 2021க்கு முன்னர் கிடைக்காது...  குறைந்தபட்சம் அதுவரை நாம் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டியிருக்கும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.