This Article is From Oct 22, 2019

தள்ளாடும் 93 வயதில் வாக்களித்த முதியவர்! 'ஹீரோ' என மத்திய அமைச்சர் பாராட்டு!!

நாடு முழுவதும் 18 மாநிலங்களில் இடைத்தேர்தல்களும், மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தலும் இன்று நடைபெற்றது. இதன் முடிவுகள் 24-ம்தேதி வெளியிடப்படுகின்றன.

93 வயதாகும் வாக்காளர் கண்ணா ஜியுடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

ஹைலைட்ஸ்

  • Mr Khanna, 93, exercised his vote in Mumbai.
  • "Today's hero is Khanna-ji," Ms Irani said praising the man's courage.
  • Maharashtra election observed lower than expected turnout on Monday.
Mumbai:

தள்ளாடும் 93 வயதில் முதியவர் ஒருவர் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களித்துள்ளார். அவரை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பாராட்டி பேட்டி கொடுத்துள்ளார். 

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

நாட்டின் வர்த்தக தலைநகரமாகவும், இந்தி திரைப்படங்களின் மையமாகவும் உள்ள மும்பை மகாராஷ்டிராவில் வருவதால், இங்கு இந்தி திரையுலக பிரபலங்களும், கிரிக்கெட் நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை இன்று செலுத்தினார்கள். 

இந்த நிலையில் மும்பையை சேர்ந்த 93 வயதாகும் கண்ணாஜி மகாராஷ்டிர மக்களை வெகுவாக இன்று ஈர்த்துள்ளார். தனது வயதையும், முதிர்ச்சியையும் பொருட்படுத்தாமல் வாக்குச் சாவடிக்கு வந்து கண்ணாஜி தனது வாக்கை பதிவு செய்தார். 

அவரை பாராட்டி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'இன்றைக்கு கண்ணாஜி தான் ஹீரோ. அவர் ராணுவத்தில் பணி புரிந்திருக்கிறார். 93 வயதாகும் அவர், முதுமையை பொருட்படுத்தாமல் நேரில் வந்து தனது வாக்கைப் பதிவு செதிருக்கிறார். அவரே வாக்களிக்கும்போது தற்போது வரை வாக்களிக்காத மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.  

மகாராஷ்டிராவில் ஒரு கட்டத்தின்போது வாக்கு சதவீதம் குறைந்ததை தொடர்ந்து, வாக்காளர்களை வாக்களிக்குமாறு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வழியாக கேட்டுக் கொள்ளத் தொடங்கினர். 

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் அமிர் கான், நடிகை மாதுரி தீட்சித், அனில் கபூர், ஹிருத்திக் ரோஷன், ஜாவித் அக்தர், சபானா ஆஸ்மி, தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் தங்களது வாக்கை மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பதிவு செய்துள்ளனர்.

.