2019 Maharashtra Election Results: ஆதித்யா தாக்கரே சிவசேனாவின் மிகவும் மரியாதைக்குரிய முகமாக உருவெடுத்துள்ளார்.
Mumbai: மகாராஷ்டிராவில் திங்களன்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்த வருகிறது. இதில், மும்பையின் வொர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்யா தாக்கரே தொடர்ந்து, முன்னிலை வகித்து வருகிறார்.
சிவசேனாவின் கோட்டையான வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே (29), எளிதில் வெற்றி பெறுவார் என்று அறியப்படுகிறது. தேசியாவாத காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் மானேவை எதிர்த்து ஆதித்யா அங்கு போட்டியிட்டார்.
ஆதித்யா தாக்கரேவின் தாத்தா பால் தாக்கரே 1966-ல் சிவசேனாவை நிறுவியதிலிருந்து தேர்தலில் போட்டியிடாமல் இருந்து வந்த தாக்கரே குடும்பம் முதன்முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
பாஜகவுக்கு இன்றியமையாததாக சிவசேனா வென்றால், ஆதித்யா தாக்கரே பாஜகவின் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸுக்கு அடுத்தப்படியாக துணைப் முதல்வர் பொறுப்பு வகிப்பார் என கூறப்படுகிறது.
ஆதித்யா தாக்கரே சிவசேனாவின் மிகவும் மரியாதைக்குரிய முகமாக உருவெடுத்துள்ளார். மேலும் அவரது தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அணிவகுப்புகள் மற்றும் மெட்ரோ கொட்டகைக்காக ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிரான போராட்டங்கள் போன்ற பிரச்சாரங்களுக்கு அவர் அளித்த ஆதரவு ஆகியவற்றால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
சேனா தலைவர் தத்தா நல்வாடே 1990 முதல் 2004 வரை வொர்லியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்தார். கடந்த 2009ம் ஆண்டில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்சிபி) சச்சின் அஹிர், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் சேனா வாக்குகளை பெற்றதால் அந்த இடத்தை வென்றார்.
இதைத்தொடர்ந்து, சேனாவின் சுனில் ஷிண்டே 2014ல் வென்றார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட, கட்சியின் அரவிந்த் சாவந்த் வொர்லி நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.
அந்தத் தொகுதியை "வளர்ச்சியின் மாதிரி" ஆக மாற்ற விரும்புவதாக ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார்.