हिंदी में पढ़ें Read in English
This Article is From Oct 17, 2019

Maharashtra Assembly Elections 2019 - ‘ஏன் சவார்க்கருக்கு… கோட்சேவுக்கே பாரத ரத்னா விருதினை வழங்குங்கள்’ :மனிஷ் திவாரி

Maharashtra Assembly Elections 2019: சவார்க்கரின் வரலாறு அனைவருக்கும் தெரியும். காந்தியைக் கொலை செய்ததாக சவார்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். இன்று பாஜக அரசு பாரத ரத்னாவை சவார்க்கருக்கு கொடுப்பதாக கூறுகிறது.

Advertisement
இந்தியா Translated By

துராம் கோட்சேவிற்கு மிக உயர்ந்த விருதான சிறந்த குடிமகனுக்கான விருதினை வழங்க வேண்டும் -மனிஷ் திவாரி

Highlights

  • காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்துள்ளார்
  • கோட்சேவிற்கு சிறந்த குடிமகனுக்கான விருதினை வழங்க வேண்டும்
  • காந்தியைக் கொலை செய்ததாக சவார்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
Nagpur:

மகாராஷ்டிரா தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையில் விநாயக் தாமோதர் சவார்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்துள்ளார். மேலும் உடனடியாக நாதுராம் கோட்சேவிற்கு மிக உயர்ந்த விருதான சிறந்த குடிமகனுக்கான விருதினை வழங்க வேண்டும் என்று  தெரிவித்தார். 

சவார்க்கர் மகாத்மா காந்தியை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதே சமயம் நாதுராம் கோட்சே காந்தியை படுகொலை செய்தார். இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் என்.டி.ஏ  அரசாங்கம் உடனடியாக பாரத ரத்னாவை கோட்சேவுக்கு சார்பாக சவார்க்கருக்கு வழங்க வேண்உம் என்று நாக்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

முன்னதாக காங்கிரஸ் தலைவர் ரஷீத்  ஆல்வியும் சவார்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதற்காக பாஜகவை கடுமையாக சாடினார். நாதுராம் கோட்சேவின் பெயர் வரிசையில் அடுத்ததாக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

Advertisement

“சவார்க்கரின் வரலாறு அனைவருக்கும் தெரியும். காந்தியைக் கொலை செய்ததாக சவார்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். இன்று பாஜக அரசு பாரத ரத்னாவை சவார்க்கருக்கு கொடுப்பதாக கூறுகிறது. அடுத்த வரிசையில் கோட்சே இருக்கக்கூடும் என்று நான் அஞ்சுகிறேன்” என்று ஆல்வி கூறினார். 

சமீபத்தில் பாஜக செயற்குழு ஜே.பி. நட்டா மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆகியோர் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையை வெளியிட்டனர்.

Advertisement

இந்த அறிக்கையில் பாரத ரத்னா விருதுகள் குறித்த ஒரு பக்கத்தில் மகாத்மா ஜோதிராவ் பூலே, சாவித்ரிபாய் பூலே மற்றும் வீர் சவார்க்கர் ஆகியோரின் பெயர்களை கட்சி முன்மொழிந்துள்ளது. 

Advertisement