மகாராஷ்டிராவில் சிவசேனாவின் பொதுக்கூட்டத்தில், தேஜஸ் தாக்கரே (மஞ்சள் நிற குர்தா).
Mumbai: மகாராஷ்டிராவில், நேற்று நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் தேஜஸ் கலந்துகொண்டது அவரது அரசியல் நகர்வுகள் குறித்த ஊகங்களை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஊகத்திற்கு அவரது தந்தை உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரேவின் இளைய சகோதரர் தேஜஸ் தாக்கரே, இந்த மேடைக்கு வந்துள்ளது பொதுக்கூட்டத்தை பார்ப்பதற்காக மட்டுமே என்று அவர் கூறினார். மேலும், தேஜஸ் காட்டிலேயே அதிகம் வசிக்க விரும்புவார் என்று அவர் கூறினார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அறிய வகை பாம்புகளுக்குப் 'போய்கா தாக்கரே' என்று பெயர் வைத்த தேஜஸ் (24), அந்த பாம்பை கண்டுபிடிக்க உதவிய அவரது பங்களிப்புக்காக சமீபத்தில் செய்திகளில் பரவலாக பேசப்பட்டார்.
மகாராஷ்டிராவில் வரும் அக்.21 தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், உத்தவ் தாக்கரேவின் மூத்த மகன் ஆதித்யா தாக்கரே 'வொர்லி' தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த 2016ம் ஆண்டில், தேஜஸ் மூன்று புதிய வகை நண்டுகள் கண்டுபிடித்தார், இது மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படுவது ஆகும். இந்த கண்டுபிடிப்புக்காக கடலோர மாவட்டங்களான கொங்கன், சதாரா, கோலாப்பூர் மற்றும் அஹமத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் கள பயணங்களை மேற்கொண்டுள்ளார்.