This Article is From Nov 27, 2019

மகாராஷ்டிராவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்கார் நியமனம்!!

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

மகாராஷ்டிராவில் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ. காளிதாஸ் கொலம்கார் நியமனம்!!

இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்கும் காளிதாஸ் கொலம்கார்.

Mumbai:

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நாளை முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில், இதனை நடத்தி வைப்பதற்காக பாஜக எம்எல்ஏ காளிதாஸ் கொலம்காரை இடைக்கால சபாநாயகராக கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நியமித்துள்ளார். 

வடாலா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் இந்த காளிதாஸ் கொலம்கார் ஆவார். 

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு கடந்த சனிக்கிழமை பொறுப்பேற்றது. முதல்வராக, பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்கிடையே முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியை முறையே தேவேந்திர பட்னாவிசும், அஜித் பவாரும் இன்று ராஜினாமா செய்தார்கள். 

நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட வேண்டும் என்பதால், சபாநாயகராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்த நிலையில் பாஜகவின் மூத்த எம்எல்ஏ காளிதாஸ் கொலம்காரை இடைக்கால சபாநாயகராக கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நியமித்துள்ளார். 

.