This Article is From Nov 26, 2019

'30 மணிநேரம் தேவையில்லை; 30 நிமிடங்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம்' - சிவசேனா சவால்!!

மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வரும் அரசியல் சிக்கல்கள் நாளையுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

'30 மணிநேரம் தேவையில்லை; 30 நிமிடங்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம்' - சிவசேனா சவால்!!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Mumbai:

பெரும்பான்மையை நிரூபிக்க 30 மணி நேரம் தேவையில்லை; 30 நிமிடங்களில் எங்களது பெரும்பான்மையை நிரூபித்து விடுவோம் என்று பாஜகவுக்கு சிவசேனா சவால் விடுத்துள்ளது. 

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான அரசு கடந்த சனிக்கிழமை பொறுப்பு ஏற்றது. இதற்கு தேசியவாத காங்கிரசின் 54 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக தெரிவித்திருந்தது. அன்றைய தினம் முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவீசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

அவர்களிடம் பெரும்பான்மை இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, தேசசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் நாளை தேவேந்திர பட்னாவீஸ் தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு 30 மணி நேரம் தேவையில்லை என்றும், 30 நிமிடங்களில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, துணை முதல்வர் பதவியை தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ராஜினாமா செய்திருக்கிறார். இதன்பின்னர் மதியம் 3.30-க்கு முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, முதல்வர் பொறுப்பில் இருந்து பதவியை ராஜினாமா செய்வதாகவும், இதற்கான கடிதத்தை கவர்னர் கோஷ்யாரியிடம் அளிக்க உள்ளதாகவும் பட்னாவீஸ் தெரிவித்தார். 

மகாராஷ்டிர அரசியலில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வரும் அரசியல் சிக்கல்கள் நாளையுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.