This Article is From Jul 06, 2020

கொரோனாவின் தாக்குதலுக்கு மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 204 பேர் உயிரிழப்பு

நோய் குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து மகாராஷ்டிராவில் தற்போது 87,681 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவின் தாக்குதலுக்கு மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 204 பேர் உயிரிழப்பு

ஒட்டுமொத்தமாக 9,206 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா தாக்குதலுக்கு மகாராஷ்டிராவில் 204 பேர் உயிரிழந்தனர்
  • மாநிலத்தில் மொத்தம் 2,11,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,15,262 ஆக உயர்ந்துள்ளது.
Mumbai:

கொரோனாவால் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவில் 204 பேர் இன்று உயிரிழந்துள்ளார்கள்.

இன்று மட்டும் புதிதாக 5,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 2,11,987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 9,206 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,522 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,15,262 ஆக உயர்ந்துள்ளது.

நோய் குணம் அடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை தவிர்த்து மகாராஷ்டிராவில் தற்போது 87,681 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரையில்லாத அளவுக்கு ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,793 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,285 பேர் ஆண்கள், 1,542 பேர் பெண்கள் ஆவார்கள். 

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 33,518 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத் பாதிப்பில் 70,370 பேர் ஆண்கள், 44,586 பேர் பெண்கள், 22 பேர் திருநங்கைகள் ஆவர்.

தமிழகத்தில் 49 அரசு, 46 தனியார் என மொத்தம் 95 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் தனியார் மற்றும் 46பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.

.