This Article is From Apr 30, 2020

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!!

மும்பையின் நெரிசல் நிறைந்த சேரிப் பகுதியான தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!!

மகாராஷ்டிராவில் இன்று 180 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Mumbai:

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 583 கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 10, 490 ஆக உயர்ந்துள்ளது. அவக்ளில் 7,061 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியுள்ளது. மும்பையில் மட்டும் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று 180 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,773 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலத்தில் 733 கட்டுப்பாட்டு மண்டலங்கள் (Containment Zones)உள்ளன. மொத்தம் 10,092 கண்காணிப்புக் குழுக்கள் இன்று மாநிலம் முழுவதும் பணியாற்றியுள்ளன, மேலும் 42.11 லட்சம் மக்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், மும்பையின் நெரிசல் நிறைந்த சேரிப் பகுதியான தாராவியில் புதிதாக 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,718 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 33,050 ஆக உள்ளது. அவர்களில் 1,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

.