This Article is From Aug 08, 2020

மகாராஷ்டிராவில் 5 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு!!

மும்பையில் இன்று 1,304 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மகாராஷ்டிராவில் 5 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு!!

The total number of active cases in Maharashtra stands at 1,47,048 (File)

ஹைலைட்ஸ்

  • இன்று மட்டும் 275 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்
  • இன்று 11,082 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
  • 9,89,612 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Mumbai:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 20 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் கொரோனா எண்ணிக்கை 5 லட்சத்தினை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,822 பேர் கொரோனா தொற்றால் புதியதாக இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 5,03,084 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 222 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 275 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். எனவே ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 17,367 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் அதிகபட்சமாக 11,082 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3,38,362 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மாநிலம் முழுவதும் 26,47,020 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,47,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,89,612 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 35,625 பேர் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் வர்த்தக தலைநகரும், மாநில தலைநகருமான மும்பையில் இன்று 1,304 பேர் புதியதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மும்பையில் 1,22,316 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,751 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையை போலவே புனேவிலும் இன்று 1,457 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால் புனேவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,500 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதியதாக 34 பேர் உயிரிழந்ததுடன் சேர்த்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,744 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டு மொத்தமாக தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,537 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,88,611 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 42 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியா கொரோனா தொற்று பாதிப்பில் சர்வதேச அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.