Maharashtra Assembly Election 2019: மும்பையில் தனது வாக்கை பதிவு செய்தார் அமீர்கான்.
Mumbai: மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் நடிரும், இயக்குநருமான அமீர்கான் காலையிலே தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதற்காக அமீர்கானும் அவரது மனைவி கிரண் ராவும் காலையிலே வாக்குச்சாவடி வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமீர்கான், மகாராஷ்டிரா மக்கள் மிகப்பெரிய அளவில் வாக்கு சதவீத்தை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மகாராஷ்டிராவின் முக்கிய தேவை கருதி நான் எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். இதேபோல், மகாராஷ்டிராவை சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையில் பங்காற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமீர்கான் மனைவி கிரண் ராவ், நமது நாட்டை நாம் சந்தோஷமாக பார்க்க வேண்டும். விவசாயம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குடிமக்களுக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்தையும் நாம் நினைத்து நமது வாக்கினை செலுத்த வேண்டும்.
இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு வரும் வியாழக்கிழமை வாக்கு எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக - சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைந்துள்ளது.