This Article is From Oct 25, 2019

Elections 2019: தேர்தல் முடிவுகளுக்கு முன்பே வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாராகும் பாஜக!! - 5,000 லட்டுக்கள் ரெடி!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

தேர்தல் வெற்றியை கொண்டாட 5,000 லட்டுக்கள் ரெடி.

Mumbai:

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, நேற்றைய தினமே தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில், மாநில பாஜக தலைமையானது சுமார் 5 ஆயிரம் லட்டுகளுக்கும், மலர்களுக்கும் ஆர்டர் கொடுத்துள்ளது. 

பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கட்சி நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள் குறித்து நொடிக்கு நொடி நேரடி தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில், மும்பை பாஜக தலைமை அலுவலகத்தில் மாபெரும் திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் அனைத்தும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு சாதகமாக அமைந்ததே இந்த அளவு மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் ஆகும். டிவி-9 மராத்தி வெளியிட்டுள்ள கருத்து கணிப்புகளின் படி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 197 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெரும் என தெரிவித்தது. சிஎன்என் நீயூஸ்18 தகவலின் படி, 243 தொகுதிகளில் வெற்றி பெரும் என கணித்தது. 

தொடர்ந்து, காலை 10 மணி அளவில் பாஜக உறுப்பினர்கள் அனைவரும் தலைமை அலுவலகம் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற்பகலில் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக கட்சி தலைவர் ஒருவர் கூறும்போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பது எங்களுக்கு உறுதியாக தெரியும், எனினும் நாங்கள் எத்தனை தொகுதிகளை கைப்பற்றுவோம் என்பதை தெரிந்துகொள்வதே எங்களின் ஆர்வமாக உள்ளது என்றார்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்.21ம் தேதி நடந்த வாக்கு பதிவின் படி, மொத்தம் 61.13 சதவீத வாக்குகள் அம்மாநிலத்தில் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உத்தரகாண்ட் கேந்திரநாத் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்களையும் தனது ட்வீட்டர் பதிவில் வெளியிட்டார். 

தொடர்ந்து, கேந்திரநாத் கோவில் விழிபாடு முடித்து அங்குள்ள சாமியார்களுடன் 1 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். 

முன்னதாக, கடந்த மக்களவை தேர்தலில் போது, இதேபோன்ற பிரதமர் நரேந்திர மோடி கேந்திரநாத் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார். 

(With inputs from PTI)

.