हिंदी में पढ़ें Read in English
This Article is From Oct 18, 2019

மகாராஷ்டிரா தேர்தல்: மோடியின் பேச்சுக்கு கூட்டத்தினர் பெரும் கரகோஷம்! - வீடியோ

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டதை முக்கிய விவகாரமாக பாஜக பேசி வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

ரதமர் மோடியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Pune:

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பிரதமர் மோடிக்கு, கூட்டத்தினர் அளித்த உற்சாக கரகோஷத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மேடையின் நடுவே சென்று அவர் இரு கைகளையும் கூப்பி இரண்டு முறை குணிந்து நன்றி தெரிவித்தார். 

நண்பர்களே நீங்கள் அரசின் முடிவிற்கான ஒற்றுமையின் வலிமையை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் இதை பற்றியே பேசி வருகிறார்கள். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்பது அந்த மாநிலத்திற்கு புதிய எதிர்காலத்தை அளித்துள்ளது என்றார். 

தொடர்ந்து, கூட்டத்தினர் இதற்கு பெரும் கரகோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி மேடையின் நடுவே சென்று இரு கைகளையும் கூப்பி இரண்டு முறை குணிந்து நன்றி தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 


முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், ஜம்மு-காஷ்மீரைப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீா் என இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதாகவும் மத்திய அரசு அறிவித்தது. 

Advertisement

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. தொலைபேசி, இணையச் சேவைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 
இதனால், ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து 68-ஆவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பெரும்பாலான இடங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், போஸ்ட்-பெய்ட் சேவை கொண்ட மொபைல்களுக்கு இன்று முதல் தடை நீக்கப்படுகிறது. காஷ்மீரில் 66 லட்சம் மொபைல் பயனாளர்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போஸ்ட்-பெய்ட் சேவையை பயன்படுத்துகின்றனர். 

Advertisement

அதனால் முதல்கட்டமாக அந்த சேவைக்கு அனுமதியளிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டதை முக்கிய விவகாரமாக பாஜக பேசி வருகிறது.

Advertisement

இதனிடையே, கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசின் காஷ்மீர் நடவடிக்கையை காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், உங்களுக்கு தைரியம் இருந்தால், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை திரும்ப பெறுங்கள் பார்க்கலாம் என்றார்.
 

Advertisement