This Article is From Oct 03, 2019

2 மாநில சட்டமன்ற தேர்தல்! உட்கட்சி பிரச்னையில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ்!!

அரியானமா மற்றும் மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு உட்கட்சி பிரச்னை வெடித்துள்ளதால் அதனை தீர்த்து வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இறங்கியுள்ளார்.

இரு மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

New Delhi:

அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் இம்மாதம் 21-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் உட்கட்சி பூசலால் தவித்து வருகிறது. 

இரு மாநில தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. மக்களவை தேர்தலின்போதும் இந்த இரு மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவு இல்லாமல் இருந்தது. 

இந்நிலையில் மகாராஷ்டிராவின் காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் கூற்று ட்விட் செய்துள்ளார். அரியானாவை பொருத்தவரையில் கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வார் கட்சியின் அனைத்து மட்ட பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார். 

மாநில அரசியல் விவகாரம் தொடர்பாக சோனியாவிடம் பல்வேறு புகார்களை அளித்ததாகவும், இதனை அவர் பொருட்படுத்தவில்லை என்றும் தன்வார் குற்றம் சாட்டியுள்ளார். 

பணம் பெற்றுக்கொண்டு அரியானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சீட்டுகளை விற்பதாக தன்வார் புகார் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சோனா மாநிலங்களவை தொகுதி ரூ. 5 கோடிக்கு விலை போயுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

முன்னதாக மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகை ஊர்மிளா, தற்போது கட்சியை விட்டு விலகியுள்ளார். 

எதிர்முகாமான பாஜகாவில் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வந்து, அவரவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், உட்கட்சி பூசலால் காங்கிரஸ் தள்ளாடி வருகிறது. 
 

.