மகாராஷ்டிராவில் சிவசேனாவும், பாஜகவும் கூட்டணி ஆட்சி அமைக்கின்றன.
Mumbai: மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் 2014-ல் பதிவான நோட்டா வாக்குகளை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணியில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றது.
காங்கிரஸ் கூட்டணியில் அக்கட்சி 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றியது.
கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், 23 இடங்களை சிவசேனாவும்,பாஜகவும் இழந்திருக்கின்றன.
இதேபோன்று நோட்டா வாக்குகளும், கடந்த தேர்தலை விட தற்போது அதிகரித்திருக்கிறது. கடந்த 2014 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 741 வாக்குகள் நோட்டாவில் பதிவானது.
இந்த தேர்தலில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 134 வாக்குகள் நோட்டாவுக்கு சென்றுள்ளன. குறிப்பிடும் விதமாக மராத்வாடா பகுதியின் லாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் தீரஜ் தேஷ்முக் 1 லட்சத்து 35 ஆயிரத்து 6 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இங்கு 27 ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்று, நோட்டா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
இதேபோன்று பாலுஸ் கடிகான் சட்டமன்ற தொகுதியில் 20 ஆயிரத்து631 வாக்குகளைப் பெற்று அங்கும் நோட்டா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.