This Article is From Jun 29, 2020

மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

மகாராஷ்டிராவில் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 'மீண்டும் தொடங்கிய மிஷன்'என்ற பெயரில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு, அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்கு மும்பைக்குள் உள்ள பகுதிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பில், ஷாப்பிங், வெளிப்புற உடற்பயிற்சிகள் போன்ற அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. முகக்கவசம், சமூக இடைவெளி, தனிப்பட்ட சுகாதாரம் போன்ற அனைத்து தேவையான கட்டாய முன்னெச்சரிக்கைளுடன் எல்லைகளுக்குள்ளே மக்கள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அலுவலகம் செல்லும் மற்றும் அவரசநிலைகளுக்கு மட்டுமே கட்டுபாடில்லாமல் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

அனைத்து அத்தியாவசிய கடைகள், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான இ-காமர்ஸ் செயல்பாடு, தற்போது செயல்பட்டு வரும் அனைத்து தொழில்துறை அலகுகள் மற்றும் ஹோம் டெலிவரி ஆகியவை அனுமதிக்கப்படும்.

"அனைத்து அரசு அலுவலகங்களும் (அவசர, சுகாதாரம் மற்றும் மருத்துவம், கருவூலங்கள், பேரிடர் மேலாண்மை, காவல்துறை, என்.ஐ.சி, உணவு மற்றும் சிவில் சப்ளை, எஃப்.சி.ஐ, என்.ஒய்.கே, நகராட்சி சேவைகள் தவிர) 15% ஊழியர்களுடன் அல்லது 15 நபர்களுடன் செயல்பட வேண்டும் - எது அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை பெருநகர பகுதியில் உள்ள அனைத்து தனியார் அலுவலகங்களும் 10% ஊழியர்களுடன் அல்லது 10 நபர்களுடன் செயல்படலாம்.

பிளம்பர்ஸ், எலக்ட்ரீஷியன், பூச்சி கட்டுப்பாடு போன்ற சுயதொழில் செய்பவர்கள் தொடர்பான நடவடிக்கைகள்; கேரேஜ்கள்; செய்தித்தாள்களின் அச்சிடுதல் மற்றும் விநியோகம் (வீட்டு விநியோகம் உட்பட); எம்.எம்.ஆரில் முடிதிருத்தும் கடைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, மீண்டும் லாக்டவுன் அமலாகமல் இருக்க பொது மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை அரசு மீண்டும் தொடங்குவதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரித்த அவர், மக்கள் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த 15 நாட்களாக படிப்படியாக, அலுவலகங்கள் மற்றும் கடைகளையும், அத்தியாவசிய பணிகளில் உள்ள ஊழியர்களுக்காக மும்பையில் உள்ளூர் ரயில் சேவைகளையும் துவங்கி வருகிறோம். பொருளாதார நடவடிக்கையை மீண்டும் துவங்குவதால், ஆபத்து நீங்கியதாக ஆர்த்தமில்லை. அதனால், தேவையிருப்பவர்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

.