Read in English
This Article is From Mar 07, 2019

4 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை இரு மடங்காக உயர்வு - அதிர்ச்சி தகவல்

மகாராஷ்டிராவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விவசாயிகள் தற்கொலை 2 மடங்காக உயர்ந்திருக்கிறது. குறிப்பாக அமராவதி டிவிஷன் என்று அழைக்கப்படும் விதர்பாவில்தான் உயிரிழப்புகள் அதிகம்.

Advertisement
இந்தியா Edited by
Mumbai:

மகாராஷ்டிராவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 

இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மகாராஷ்டிர அரசு தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் விவரத்தை கடிதமாக அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2011-14 கால கட்டத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மொத்தம் 6,268 விவசாயிகள் தற்கெலை செய்து கொண்டனர். 

இந்த எண்ணிக்கை கடந்த 2015 ஜனவரி முதல் 2018-ம் ஆண்டு இறுதி கணக்கெடுப்பின்படி 11,995- ஆக உயர்ந்திருக்கிறது. மிகச்சரியாக 91 சதவீதம் அளவுக்கு விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. 

குறிப்பாக அமராவதி டிவிஷன் என்று அழைக்கப்படும் விதர்பா பகுதியில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகம். இங்கு மட்டும் 5,214 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அவுரங்காபாத் டிவிஷன் என்று அழைக்கப்படும் மராத்வாடா பகுதியில் 4,699 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

Advertisement

இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஜிதேந்திரா கட்கே என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், '' பெரும்பாலான விவசாயிகள் தற்கொலைக்கு கடன் சுமைதான் காரணம். கடன் கொடுத்தவர்கள் விவசாயிகளை துன்புறுத்தியுள்ளனர். அவர்களை அரசு கட்டுப்படுப்படுத்த வேண்டும்'' என்று கூறினார். 

Advertisement