This Article is From Jun 26, 2018

மகாராஷ்டிரா கனமழையில் மாட்டிக்கொண்ட பஸ்… குழந்தைகளை காப்பாற்றி உயிர்நீத்த டிரைவர்!

பேருந்தில் வந்த பள்ளி குழந்தைகள் பள்ளத்தில் சிக்கி முழ்க இருந்த நிலையில், துணிச்சலாக கை கொடுத்து காப்பாற்றிய டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

Advertisement
இந்தியா

Highlights

  • மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது
  • இதனால் அங்கிருக்கும் பெரும்பான்மை சாலைகள் வெள்ளம் ஓடுகிறது
  • டிரைவர் பிரகாஷின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது
Mumbai:

மகாராஷ்டிராவில் தனது பேருந்தில் வந்த பள்ளி குழந்தைகள் பள்ளத்தில் சிக்கி முழ்க இருந்த நிலையில், துணிச்சலாக கை கொடுத்து காப்பாற்றிய டிரைவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் இருக்கும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், அம்மாநில பல்கார் பகுதியில் இருக்கும் விரார் பள்ளியில் இருந்து குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியது. இதனைப் பார்க்க பேருந்தின் டிரைவர் பிரகாஷ் பாலு பாட்டில் கீழே இறங்கியுள்ளார். அப்போது வாகனத்தில் இருக்கும் குழந்தைகளில் இருவர் இறங்கி மழை தண்ணீரில் விளையாட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் எதிர்பாராத விதமாக நீர் வடிந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் சிக்கினர். இதையடுத்து, குழந்தைகளைக் காப்பாற்றுகிறார் பிரகாஷ். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். 

இது குறித்து அர்னாலா போலீஸ் நிலையத்துக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் குடும்பத்தாரிடம் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பு, ‘இரு குழந்தைகள் நீரில் மூழ்குவதைப் பார்த்த பிரகாஷ், கொஞ்சம் கூட யோசிக்காமல் கை கொடுத்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement