This Article is From Nov 15, 2019

மகாராஷ்டிரா : சிவசேனா - என்.சி.பி. - காங். இடையே விரைவில் கூட்டணி உடன்பாடு!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை மறுதினம் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா : சிவசேனா - என்.சி.பி. - காங். இடையே விரைவில் கூட்டணி உடன்பாடு!!

பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக சிவசேனா தெரிவித்திருந்தது.

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சியைமப்பதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியமைக்கும் நடவடிக்கையாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை (Common Minimum Programme) உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 

இதுதொடர்பாக 3 கட்சிகளின் தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 

3 கட்சிகளின் உயர்மட்டக்குழு குறைந்தபட்ச செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக நாளை மறுதினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சோனியாவை சந்தித்து பேசுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

மாநிலத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணியாக வந்து ஆட்சியமைக்காத சூழலில் கடந்த செவ்வாயன்று குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

.