சிவசேனாவுடன் கூட்டணியா?? எச்சரிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர்!!
Mumbai: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தனது கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை பேரழிவு தரும் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில மொத்தமுள்ள 288 இடங்களில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 98 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவையாகும். இதைத்தொடர்ந்து, 56 இடங்களை கொண்டுள்ள சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எந்தவொரு அரசாங்கத்தையும் அமைப்பது சாத்தியமில்லை. அதற்கு எங்களுக்கு சிவசேனாவின் ஆதரவு தேவை. எந்தவொரு சூழ்நிலையிலும் சிவசேனாவுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது பற்றி நாம் சிந்திக்கக்கூடாது. இது கட்சிக்கு பேரழிவு தரும் நடவடிக்கையாக இருக்கும் ”என்று நிருபம் நேற்றைய தினம் கூறியிருந்தார்.
தொடர்ச்சியாக நிருபம் எச்சரித்து வரும் நிலையிலும், பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் முயற்சியில் சேனாவை ஆதரிக்க மகாராஷ்டிரா காங்கிரசுக்குள் உட்பிரிவுகள் உள்ளன.
கடந்த வாரம் மாநிலங்களவை எம்.பி.யான ஹுசைன் தல்வாய் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி, மாநிலத்தில் உள்ள தனது முஸ்லிம்கள் பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு சேனா தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்க விரும்புவதாகக் கூறினார்.
எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரிடம் தெரிவித்துள்ளார்.
50;50 அதிகாரப்பகிர்வு நிபந்தனையில் உறுதியாக இருந்து வந்தது.
முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைமை, பாஜக - சிவசேனா கூட்டணிக்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. சிவசேனா மக்களின் ஆணையை அவமதிக்க விரும்பினால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை அமைக்கட்டும், அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று நேற்றைய தினம் கூறியிருந்தனர்.
With input from ANI