This Article is From Nov 18, 2019

சோனியா - சரத்பவார் இன்று சந்திப்பு! சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முக்கிய முடிவு!!

குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறையில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

சோனியா - சரத்பவார் சந்திப்பு மகாராஷ்டிர அரசியலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • Sharad Pawar last week said Sena, NCP and Congress will form government
  • A meeting between the Congress and Shiv Sena leaders will also take place
  • The Governor announced President's Rule in Maharashtra last week
Mumbai:

மகாராஷ்டிர அரசியல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசுகிறார். அப்போது, சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச அடிப்படை செயல் திட்டத்தின் கீழ், கொள்கை ரீதியாக வேறுபட்ட சிவசேனா கட்சியுடன் சேர்ந்து செயல்படலாம் என காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த குறைந்தபட்ச அடிப்படை செயல் திட்டம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சோனியாவுடன் இன்று பேசுகிறார்.

சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்பதால் இந்த சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிராவில் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், 'தற்போதைய அரசியல் சூழல் குறித்து முக்கியமாக பேசினோம். மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது, மாற்று அரசை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

சிவசேனா மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்' என்றார். 

மகாராஷ்டிர அரசியல் 50:50 பங்கீடு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று கூறி, சிவசேனா பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது.

தற்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் முனைப்பில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார். 

.