বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 11, 2019

Maharashtra Election: சீண்டும் சிவசேனா - முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக!!

Maharashtra News: 50:50 அதிகாரப்பகிர்வு என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்து 2 வாரங்களையும் கடந்துவிட்டது. இந்நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

Maharashtra Government 2019: மற்றொரு சந்திப்பு இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது.

Mumbai:

மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் வீட்டில் வைத்து பாஜக முக்கிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்பட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தொடர்ந்து, மற்றொரு ஆலோசனைக் கூட்டம் மாலையில் நடைபெற உள்ளது. இதனிடையே, குதிரை பேரத்தை தவிர்க்க சிவசேனா தனது எம்எல்ஏக்களை பாதுகாப்பாக மும்பை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது. 

50:50 அதிகாரப்பகிர்வு என்ற கோரிக்கையில் சிவசேனா பிடிவாதமாக இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்து 2 வாரங்களையும் கடந்துவிட்டது. இந்நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

ஆளுநரின் அழைப்பு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் அடுத்தடுத்து, பல்வேறு கட்டமாக பாஜக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறது. மறுபக்கம் தங்களது எம்எல்ஏக்களை பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து காக்க சொகுசு விடுதியில் தங்க வைத்து சிவசேனா பாதுகாத்து வருகிறது. 

Advertisement

இதனிடையே, காங்கிரஸ் கட்சியும் தங்களது எம்எல்ஏக்களுக்கு பாஜக அல்லது சிவசேனா வலைவீசி அழைக்கக் கூடும் என்ற கவலையில் உள்ளது. சிவசேனாவின் எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்து 2 மணிநேர தூர தொலைவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, காங்கிரஸூம் தனது எம்எல்ஏக்களை மாநிலத்தில் இருந்து வெளியிற்றியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 41 பேரும் ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, எம்எல்ஏக்களை குதிரைபேரத்திற்கு அழைக்க பாஜக அனைத்து வழிகளிலும் முயற்சிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் அவ்வாறு பேரம் செய்ய முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

சிவசேனா தனது 50:50 அதிகாரப்பகிர்வு என்ற கோரிக்கையில் எவ்வளவு பிடிவாதமாக இருந்தாலும், அதற்கு பாஜக செவிசாய்க்க மறுத்து வருவதால், பாஜக மீது சிவசேனா கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. இதனிடையே, மாற்று ஆட்சி அமைக்க முடிவு செய்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு சிவசேனா தூதுவிட்டது. 

எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், கட்சி எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் சந்தித்த உத்தவ் தாக்கரே அங்கு அவர்களுடன் இரவில் தங்கினார். தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவும் சொகுசு விடுதியிலே தங்கி உள்ளார்.

Advertisement

இதனிடையே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, தங்களிடம் பெரும்பான்மை உள்ளதாகவும், அதனால், தாங்களே முதலமைச்சர் பதவி வகிப்போம் என்று கூறும் பாஜக மகாராஷ்டிராவில் தங்கள் ஆட்சியை அமைக்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நக்கலாக கூறியுள்ளார். 

Advertisement