மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று மகாராஷ்டிர அரசிடம் தெரிவித்திருக்கிறது.
New Delhi: மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரண நிதியாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தொகையுடன், ரூ. 7,900 கோடியை கூடுதலாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வறட்சி நிவாரணம் தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத் தவிர்த்து தாராவி மேம்பாட்டு திட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டது.
இதுபற்றி, மகாராஷ்டிர முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். இது ஆக்கப்பூர்வமான சந்திப்பு. அவரிடம் வறட்சி பாதிப்புகளை எடுத்துக் கூறி உதவி கேட்டுள்ளேன். ரயில்வேக்கு நிலம் மற்றும் தாராவி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்டவை குறித்தும் பேசினேன்.'' என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பருவமழை பொய்த்ததால் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியுடன், கூடுதலாக ரூ. 7,900 கோடியை வழங்க வேண்டும் என மகாராஷ்டிரா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.