Assembly Elections: தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல் மாநிலங்களில் மாதிரி நடத்தை விதிமுறை அமலில் இருக்கும்
New Delhi: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் இன்று மதியம் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இரண்டு மாநிலத்தோடு ஜார்கண்ட் மாநிலத் தேர்தலும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 27-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு முன்னர் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்குபதிவு நடத்தப்படலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தேதிகள் அறிவிக்கப்பட்டது முதல் மாநிலங்களில் மாதிரி நடத்தை விதிமுறை அமலில் இருக்கும். ஆளும் பாஜகவும் சிவசேனாவும் ஏற்கனவே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தேவேந்திர பட்நாவிஸ், மகா ஜன் ஆதேஷ் யாத்திரையைத் தொடங்கி மாநிலம் முழுவதும் பயணித்து மக்களை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிகளைப் பிரிப்பதில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
அடுத்து வரும் சில நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளும் அறிவிக்கும் எனத் தெரிகிறது.
2014இல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் தேர்தல்கள் அக்டோபரில் நடந்தன.