Assembly elections 2019 dates: மகாராஷ்டிரா, ஹரியானாவில் அக்.21ம் தேதி வாக்குப்பதிவு
New Delhi: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் அக்.21ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும் அக்.24ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதாவது அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். செப்டம்பர் 27ம் தேதியன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, அக்டோபர் 4ம் தேதியன்று முடிவடையும். அக்டோபர் 24ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மூத்தலாக் தடை, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிரடி முடிவுகளை மோடி அரசு மேற்கொண்டது.
இந்நிலையில், ஹரியானா சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 2ம் தேதியும், மகாராஷ்டிராவில் நவம்பர் 9ம் தேதியும் முடிவடைகிறது. எனவே, இந்த தேதிகளுக்கு முன்னால், ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ள, மகாராஷ்டிரா மற்றும், 90 தொகுதிகள் உள்ள ஹரியானாவில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும். அதாவது அக்டோபர் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். செப்டம்பர் 27ம் தேதியன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கி, அக்டோபர் 4ம் தேதியன்று முடிவடையும். அக்டோபர் 24ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
காராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் விரிவான ஆய்வுகளை செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேர்தல் நடத்துவது தொடர்பாக இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 1.82 கோடி. மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8.94 கோடி ஆகும்.