This Article is From May 31, 2020

அரசு ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையை கட்டாயமாக்கியது மகாராஷ்டிரா அரசு!

சமூக விலகலையும், கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தும் நடைமுறையையும் மாநில அரசு கட்டாயமாக்கி அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனையை கட்டாயமாக்கியது மகாராஷ்டிரா அரசு!

முழுமையான அளவில் அரசு ஊழியர்கள் எப்போது பணிக்கு திரும்புவார்கள் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.82 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், மாகராஷ்டிரா மாநிலம் அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. இம்மாநிலம் முழுவதும் 65 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மாநில காவல்துறையினர் 114 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையோடு சேர்த்து நேற்று1,330 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் , பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்களுக்கு தினமும் உடல் வெப்பநிலை பரிசோதனையை கட்டாயமாக்கியுள்ளது மாநில அரசு. மட்டுமல்லாமல், சமூக விலகலையும், கிருமி நாசினிகளைக் கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தும் நடைமுறையையும் கட்டாயமாக்கி அதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

முழுமையான அளவில் அரசு ஊழியர்கள் எப்போது பணிக்கு திரும்புவார்கள் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

.