This Article is From Jul 07, 2020

தனிநபர் பாதுகாப்பு உடை (PPE Kits) அணிந்து நகைக்கடையில் தங்க நகைகள் கொள்ளை!

சிசிடிவியில் பதிவான விவரங்களின்படி கொள்ளையர்கள் தனிநபர் பாதுகாப்பு உடைகள், கையில் கவசம், தலையில் தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து பாதுகாப்புடன் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

தனிநபர் பாதுகாப்பு உடை (PPE Kits) அணிந்து நகைக்கடையில் தங்க நகைகள் கொள்ளை!

கடை உரிமையாளர் அளித்த  புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Satara, Maharashtra:

தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து நகைக்கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு பல ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பொது முடக்க காலத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தனிநபர் பாதுகாப்பு கவசங்களுடன் வந்து பூட்டை உடைத்து கொள்ளையிட்டுள்ளனர். சுமார் 2 நாட்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நகைக்கடையின் பின்பக்க சுவரை உடைத்து அதன்வழியே கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.

மொத்தம் 780 கிராம் அளவுக்கு தங்க நகைகள் ஷோ கேஸ், கப் போர்டு ஆகிய இடங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவியில் பதிவான விவரங்களின்படி கொள்ளையர்கள் தனிநபர் பாதுகாப்பு உடைகள், கையில் கவசம், தலையில் தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து பாதுகாப்புடன் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுதொடர்பாக கடை உரிமையாளர் அளித்த  புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.