This Article is From Apr 04, 2020

‘சிறுபிள்ளைத்தனமா இருக்கு!’ – மோடியின் ‘விளக்கு ஏற்றுக’ கோரிக்கையை விமர்சித்த அமைச்சர்!!

ஏப்ரம் 5ம் தேதி அதாவது நாளை மறுதினம் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அனைத்து மெழுகுவர்த்தி ஏற்றுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

‘சிறுபிள்ளைத்தனமா இருக்கு!’ – மோடியின் ‘விளக்கு ஏற்றுக’ கோரிக்கையை விமர்சித்த அமைச்சர்!!

இந்தியாவில் ஊரடங்கு 14-ம்தேதி வரை நீடிக்கிறது.

ஹைலைட்ஸ்

  • வரும் ஞாயிறன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் விளக்கு ஏற்ற மோடி கோரிக்கை
  • நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம் என்கிறார் பிரதமர்
  • மோடி அறிவிப்பு சிறுபிள்ளைத்தனமாக உள்ளதென மகாராஷ்டிர அமைச்சர் விமர்சனம்
Thane:

நாளை மறுதினம் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளது நிலையில், அது சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக மகாராஷ்டிர அமைச்சர் ஜிதேந்திர அவாத் விமர்சித்துள்ளார்.

இன்று  நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார். 

அதில், பிரதமர் மோடி கூறியதாவது, மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், ஏப்.5ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம், 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்துவோம் என்று கூறியுள்ளார். 

இதனை வரவேற்றும் எதிர்ப்பு தெரிவித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர வீட்டு வசதித்துறை அமைச்சரான, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜிதேந்திர அவாத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இன்று அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது-

பிரதமர் மோடி கூறியிருக்கும் விளக்கேற்றும் கோரிக்கை முட்டாள்தனமாகவும், சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் உள்ளன, ஏழை மக்கள் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பது போன்ற அறிவிப்பை மோடி வெளியிடுவார் என எதிர்பார்த்தோம்.

விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு செலவிடும் தொகையை நான் ஏழை மக்களுக்கு அளிக்கப் போகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.