This Article is From Aug 09, 2019

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் சிரித்தபடி செல்ஃபி எடுக்கும் காட்சி - வீடியோ

தனஞ்சய் முண்டே, முதலமைச்சர் ஃபட்னாவிஸ் “உணர்வே இல்லாத அமைச்சருக்கு” எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஃபட்னாவிஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வான்வழி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். நிலைமை ‘மிக மோசம்’ என்று விவரித்தார்.

Mumbai:

மகாராஷ்டிரா அமைச்சர் கிரிராஜ் மகாஜன் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்றபோது சிரித்தபடி வீடியோ எடுத்த காட்சிகள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஏஎன்ஐ வெளியிட்ட வீடியோவில் சிரித்தபடி  செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். 

பார்வையிடச் சென்ற மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ஆகும். கிராமங்களும் சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளன. மகாராஷ்டிராவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் ஒன்றான சங்கிலியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 

ட்விட்டரில் ஒருவர் அமைச்சர் 'இலவச படகு பயணத்தை ரசிக்கிறார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொருவர் சிறந்த செல்ஃபி வீடியோவுக்கான விருது உங்களுக்குத்தான் என்று பதிவிட்டிருந்தார். 

12 தேசிய பேரிடர் மேலாண்மை குழு அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வான்வழி ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். நிலைமை ‘மிக மோசம்' என்று விவரித்தார். 

அமைச்சர் மகாஜனின் நடவடிக்கைகள் எதிர்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. என்.சி.பி கட்சியை சேர்ந்த தனஞ்சய் முண்டே, முதலமைச்சர் ஃபட்னாவிஸ் “உணர்வே இல்லாத அமைச்சருக்கு” எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

.