This Article is From Nov 22, 2019

'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' - உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி பொதுநல வழக்கு!!

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய உள்ளது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என முடிவு எட்டப்பட்டுள்ளது.

'மகாராஷ்டிராவில் புனிதமற்ற கூட்டணி' - உச்சநீதிமன்றம் தலையிடக் கோரி பொதுநல வழக்கு!!

கொள்கையால் வேறுபட்ட காங்கிரஸ் - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன.

New Delhi:

மகாராஷ்டிராவில் புனிதமற்ற, களங்கமுடைய கூட்டணி அமைந்திருப்பதாகவும், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு குடியசு தலைவர் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்று கோரி, பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் சிவசேனா  - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய உள்ளது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என முடிவு எட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சுரேந்திரா இந்திராபகதூர் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க உள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேர்தலின்போது ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டன. அவர்கள் மூவரும் இணைந்து ஆட்சியமைத்தால் அது மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக அமையும். மக்களின்  முடிவுக்கு எதிராக மகாராஷ்டிராவில் ஆட்சி அமையவிருக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் முடிவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக ஏற்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

.