Read in English
This Article is From May 09, 2019

மகாராஷ்டிராவில் ஜவுளி குடோனில் பெரும் தீ விபத்து! - 5 பேர் உயிரிழப்பு!!

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
இந்தியா Edited by

உயிரிழப்பு அதிகரிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Pune:

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிலர் காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

ஜவுளி குடோனில் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது காலை 9 மணிக்கு உருளி டெவாச்சி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தீ விபத்து ஏற்பட்டபோதும், மூச்சுத் திணறல் காரணமாகத்தான் உயிரிழப்புகள் நேர்ந்திருக்கின்றன. 

தீ விபத்து தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான சரியான காரணம் குறித்த விவரம் இன்னும் தெரியவில்லை.

Advertisement